2025 ஆம் ஆண்டு IBSA (இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா) தலைவர்கள் கூட்டம் ஆனது G20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.
மூன்று நாடுகளும் முக்கிய ஜனநாயகங்கள் மற்றும் உலகின் வளர்ந்து வரும் தெற்கு நாடுகளாக பகிரப்பட்ட மேம்பாட்டு முன்னுரிமைகள் குறித்து விவாதித்தன.
இங்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை சீர்திருத்தம் அவசியம் என்பதை இந்த நாடுகளின் தலைவர்கள் எடுத்துரைத்து, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவிற்கான நிரந்தரப் பிரதிநிதித்துவத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
நிர்வாகம், மேம்பாடு மற்றும் பலதரப்பு சீர்திருத்தங்களில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் முத்தரப்பு மன்றமாக IBSA அமைப்பின் பங்கை இந்தக் கூட்டம் மீண்டும் உறுதிப்படுத்தியது.