இந்தியாவின் IFFCO (இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு லிமிடெட்) மற்றும் அமுல் (குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு) ஆகியவை 2025 ஆம் ஆண்டு ICA உலகளாவியத் தரவரிசையில் உலகளவில் சிறந்தக் கூட்டுறவு அமைப்புகளாக இடம் பெற்றன.
கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற ICA CM50 மாநாட்டில் சர்வதேசக் கூட்டுறவு கூட்டணி (ICA) ஆனது 2025 ஆம் ஆண்டு உலகக் கூட்டுறவு கண்காணிப்பு நிகழ்வில் இந்தத் தரவரிசையை வெளியிடப்பட்டது.
அமுலின் பால் உற்பத்தி வலையமைப்பு மில்லியன் கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் வேளாண் வணிகத்தில் இந்தியாவின் வலிமையை நிரூபிக்கிறது.
நிலையான உர உற்பத்தி, டிஜிட்டல் தளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை மூலம் IFFCO மில்லியன் கணக்கான விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.