இந்தியாவைச் சேர்ந்த ஷெஃபாலி ஜுனேஜா அவர்கள் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO - International Civil Aviation Organization) விமானப் பாதுகாப்புக் குழுவின் முதல் பெண் தலைவராக பதவி ஏற்று உள்ளார்.
12 வருட இடைவெளிக்குப் பிறகு விமானப் பாதுகாப்பு குழுவின் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
இந்த மூலோபாயக் குழுவை வழி நடத்தும் முதல் பெண் ஜூனேஜா ஆவார்.
ICAO என்பது கனடாவின் கியூபெக்கைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு சிறப்பு ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆகும்.