சமீபத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமானது (ICAR - Indian Council of Agricultural Research) அதன் 92வது நிறுவன தினத்தை 2020 ஆம் ஆண்டுஜூலை 16 அன்று கொண்டாடியது.
இது 1929 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
இது சமுதாயப் பதிவுச் சட்டம், 1860 என்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கமாகும்.
இது இந்திய அரசின் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையின் கீழ் உள்ள ஒரு தனிச்சுதந்திர அமைப்பாகும்.