TNPSC Thervupettagam

ICAR-NRCB - இரண்டு புதிய வாழை ரகங்கள்

August 23 , 2026 5 hrs 0 min 57 0
  • தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை - தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (ICAR-NRCB) காவேரி தங்கம் மற்றும் காவேரி நாடன் ஆகிய இரண்டு புதிய வாழை ரகங்களை வெளியிட்டுள்ளது.
  • காவேரி தங்கம் என்பது வழக்கமான ரகங்களை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக வைட்டமின் ஏ, மஞ்சள் நிற சதைப்பகுதி மற்றும் 15 நாட்கள் வரை சேமித்து வைக்கும் ஆயுட்காலம் கொண்ட ஒரு பிரீமியம்/உயர்வகை ரகமாகும்.
  • காவேரி நாடன் ஒரு அதிக மகசூல் தரும் ரகமாகும் என்பதோடு இது ஹெக்டேருக்கு 75 டன்கள் வரை உற்பத்தி செய்யக் கூடியது, இது வழக்கமான ரகங்களின் மகசூலை விட கிட்டத்தட்ட இருமடங்காகும்.
  • வாழை விவசாயிகளுக்கு நீரைச் சேமிக்கவும் மற்றும் பருவநிலை தொடர்பான சவால்களைச் சமாளிக்கவும் உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சென்சார் அடிப்படையிலான நீர்ப்பாசனத்தையும் ICAR-NRCB ஊக்குவிக்கிறது.
  • மத்திய கிழக்கு நாடுகளுக்கு நேந்திரன் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான தொழில் நுட்ப ஆதரவை இந்த மையம் வழங்கும், ஏற்றுமதி சார்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்காக நான்கு தொகுப்புகள் திட்டமிடப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்