ICC அமைப்பின் கிரிக்கெட் புகழார மன்றம் 2025 – M.S. தோனி
June 12 , 2025 481 days 508 0
சர்வதேச கிரிக்கெட் சபையானது (ICC) ஐந்து ஆடவர் மற்றும் இரண்டு மகளிர் உட்பட ஏழு கிரிக்கெட் வீரர்களை அதன் 2025 ஆம் ஆண்டிற்கான புகழ் மன்றத்தில் (Hall of Fame) சேர்த்தது.
இந்த ஆண்டு ICC புகழ் மன்றத்தில் M.S. தோனி சேர்க்கப்பட்டுள்ளார் என்ற நிலையில் அவர் இந்த விருதைப் பெற்ற 11வது இந்திய வீரரானார்.
தோனி இந்தியாவிற்காக சர்வதேசப் போட்டிகளில் 17,266 ரன்கள், 829 ஆட்டமிழப்புகள் மற்றும் அனைத்து வடிவங்களிலும் 538 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்து உள்ளார்.
இந்திய அணித் தலைவராக 2007 ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும், 2011 ஆம் ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியிலும், 2013 ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் அவர் வெற்றிகளைப் பெற்றுத் தந்தார்.