ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் (ICDS) திட்டம் ஆனது 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதியன்று அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் தொடங்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, ICDS ஆனது சாக்சம் அங்கன்வாடி திட்டம் மற்றும் POSHAN 2.0 ஆகியவற்றுடன் மறுபெயரிடப் பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 13.96 லட்சம் (1.396 மில்லியன்) அங்கன்வாடி மையங்கள் 7.65 கோடி (76.5 மில்லியன்) குழந்தைகளுக்கு சேவை வழங்குகின்றன.
ICDS ஆனது ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பகாலத்தியக் குழந்தைப் பராமரிப்பு, கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார சேவைகளை வழங்குகிறது.