TNPSC Thervupettagam
September 10 , 2025 12 days 61 0
  • ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையம் (ICIMOD) "Together We Have More Power: Status, Challenges, and the Potential for Regional Renewable Energy Cooperation in the Hindu Kush Himalaya" என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது.
  • பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் தூய்மையான எரிசக்தி வாரத்தின் போது இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
  • இந்து குஷ் இமயமலை (HKH) பிராந்தியத்தில் உள்ள நாடுகள் அவற்றின் மொத்தப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் 6.1% மட்டுமே பயன்படுத்துகின்றன.
  • இப்பகுதியில் 882 GW அளவிலான மொத்த நீர்மின் திறன் உள்ளது என்பதோடு இதில் 635 GW எல்லை தாண்டிய நதி அமைப்புகளிலிருந்து பெறப்படுகிறது.
  • அடையாளம் காணப்பட்ட நீர்மின்னாற்றல் திறனில் சுமார் 49% மட்டுமே தற்போது பயன்படுத்தப் படுகிறது.
  • HKH பிராந்தியத்தில் சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் திறன் சுமார் 3 டெராவாட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • HKH பிராந்திய நாடுகளின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளின்படி மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகள் தற்போது 1.7 டெராவாட் ஆகும்.
  • HKH பிராந்திய நாடுகளில் மட்டும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 3.5 டெரா வாட்களை விட அதிகமாக உள்ளது.
  • பூடான் மற்றும் நேபாளம் ஆகியவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து 100% மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
  • வங்காளதேசத்தில் 98% மின்சார உற்பத்தியிலும், இந்தியாவில் 77%, பாகிஸ்தானில் 76%, சீனாவில் 67% மற்றும் மியான்மரில் 51% மின்சார உற்பத்தியிலும் புதைபடிவ எரிபொருட்கள் பங்களிக்கின்றன.
  • நேபாளத்தின் மொத்த முதன்மை எரிசக்தி விநியோகத்தில் (TPES) மூன்றில் இரண்டு பங்கு, மியான்மரின் பாதி பங்கு மற்றும் பூடான் மற்றும் பாகிஸ்தானின் TPES விநியோகத்தில் கால் பங்கு உயிரி எரிபொருள்கள் மற்றும் கழிவுகள் பங்களிக்கச் செய்கின்றன.
  • தற்போதைய மற்றும் திட்டமிடப்பட்ட நீர்மின்னாற்றல் திறனில் மூன்றில் இரண்டு பங்கு பனிப்பாறை தொடர்பான அபாயங்களுக்கு உள்ளாகிறது.
  • இந்த அறிக்கை "அணைகளுக்கு ஈடானவை/சமமானவை" போன்ற நகர்ப்புற நீர்ச் சேமிப்பு, பருவநிலை-எதிர்ப்புத் திறன் கொண்ட நீர்ப்பாசனம் மற்றும் சூரிய மற்றும் காற்றாலை உள்ளிட்ட பெரிய அணைகளுக்கான நவீன மாற்றுகளை ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்