TNPSC Thervupettagam
August 2 , 2026 16 days 104 0
  • உலகின் சுரங்கம் மற்றும் உலோக அலகுகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு, குறைந்தபட்சம் ஒரு குறிப்பிடத்தக்க இயற்பியல் நீர் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளன.
  • இந்த ஆய்வு 148 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 12,000-க்கும் மேற்பட்ட வசதிகளைப் பகுப்பாய்வு செய்தது.
  • அடிப்படை நீர்ப் பற்றாக்குறையே மிகவும் பொதுவான அச்சுறுத்தலாகும் என்பதோடு இது 38% வசதிகளைப் பாதிக்கிறது, அதே நேரத்தில் வறட்சி அபாயம் உலகளவில் 27% என்ற அளவைப் பாதிக்கிறது.
  • சிலி, பெரு, தெற்கு ஆப்பிரிக்கா, வடக்கு சீனா, மத்திய இந்தியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு அமெரிக்கா ஆகிய பகுதிகளில் கூட்டு நீர் அபாயப் பகுதிகளை இந்த அறிக்கை அடையாளம் காட்டுகிறது.
  • இது சர்வதேசச் சுரங்கம் மற்றும் உலோகங்கள் மன்றத்தின் புதிய அறிக்கையாகும்.
  • சுரங்கம் மற்றும் உலோகங்கள் துறையில் உள்ள நீர் அபாயங்கள் குறித்த முதல் விரிவான, பல்வேறு பொருட்கள் சார்ந்த பகுப்பாய்வு இதுவாகும்.
  • இந்த மதிப்பீடு வெள்ளம், வறட்சி, அடிப்படை நீர் பற்றாக்குறை, அடிப்படை நீர் வறட்சி மற்றும் ஆண்டுக்கு ஆண்டு மாறுபாடு ஆகிய ஐந்து இயற்பியல் நீர் அபாயக் குறிகாட்டிகளைக் கருத்தில் கொள்கிறது.
  • சுரங்கம் மற்றும் உலோகங்கள் துறை எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான அபாயம் அடிப்படை நீர்ப் பற்றாக்குறையாகும்.
  • வறட்சி இரண்டாவது மிகவும் பரவலான நீர் அபாயமாகும்.
  • அலுமினா, அலுமினியம், எஃகு மற்றும் மாலிப்டினம் உற்பத்தி ஆலைகளில் வெள்ளப் பாதிப்பு குறிப்பாக அதிகமாக உள்ளது.
  • சர்வதேச சுரங்கம் மற்றும் உலோகங்கள் மன்றம், சுரங்கம் மற்றும் உலோகத் தொழில் துறையில் நிலையான வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில், தலைமைச் செயல் அதிகாரி தலைமையிலான ஒரு தலைமைத்துவ அமைப்பாக 2001-ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்