ICRISAT நிறுவனத்தின் 50வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள்
February 7 , 2022 1418 days 642 0
ஐதராபாத்தின் படன்சேருவில் உள்ள மித வறண்ட வெப்பமண்டலத்திற்கான சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ICRISAT - International Crops Research Institute for the Semi-Arid Tropics) வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அந்த நிறுவனத்தின் 50வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களைத் துவக்கி வைத்தார்.
மேலும், அவர் ஹைதராபாத்தில் தாவரப் பாதுகாப்பு மீதான பருவநிலை மாற்ற ஆராய்ச்சி மையம் மற்றும் விரைவு உற்பத்தி மேம்பாட்டு மையம் ஆகியவற்றைத் திறந்து வைத்து, இந்நிகழ்வின் நினைவு தபால் தலையையும் வெளியிட்டார்.