உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் முன்பை விட வேகமாக குறைந்து வருவதாக சர்வதேச எரிசக்தி முகமை (IEA) எச்சரித்தது.
அதன் கச்சா எண்ணெய்யில் 85 சதவீதத்திற்கும் மேலாகவும், அதன் எரிவாயுவில் 45 சதவீதத்திற்கும் மேலாகவும் இறக்குமதி செய்யும் இந்தியா இதனால் குறிப்பாக பாதிக்கப் படக் கூடியது.
சுமார் 90 சதவீத மேல்மட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு முதலீடு தற்போதுள்ள கிணறுகளில் இயற்கையான சரிவை ஈடுசெய்யப் பயன்படுத்தப்படுகிறது.
புதிய முதலீடு இல்லாமல், உலகளாவிய எண்ணெய் உற்பத்தியானது ஒவ்வோர் ஆண்டும் ஒரு நாளைக்கு 5.5 மில்லியன் பீப்பாய்கள் குறையக்கூடும்.
முதல் ஆண்டில் உற்பத்தி 35 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்ததுடன் ஷேல் (களிப் பாறை) மற்றும் கடல்சார் கிணறுகளின் மட்டங்கள் வேகமாகக் குறைகின்றன.
IEA இந்தியாவை ஆதாரங்களை பல்வகைப்படுத்தவும், உள்நாட்டு ஆய்வுகளை விரிவுபடுத்தவும், பல தூய்மையான மாற்று வழிகளை ஏற்றுக் கொள்ளவும் வேண்டி வலியுறுத்தியது.
புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்கு உரிமம் பெறுவதிலிருந்து உற்பத்திக்கு சுமார் 20 ஆண்டுகள் ஆகும் என்பதோடு இது நீண்ட கால அபாயங்களை எழுப்புகிறது.