சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) அதன் எரிசக்தி புத்தாக்க நிலை 2026 எனும் அறிக்கையை வெளியிட்டது.
போட்டித் திறன், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை இலக்குகள் காரணமாக உலகளாவிய சுத்தமான எரிசக்தி புத்தாக்கம் வளர்ந்து வருவதை இது எடுத்துக் காட்டுகிறது.
2025 ஆம் ஆண்டில், 320க்கும் மேற்பட்ட எரிசக்தி புத்தொழில் நிறுவனங்கள் முதல் சுற்று நிதியைப் பெற்றன என்ற நிலையில்மேலும் உலகளவில் எரிசக்தி தொடர்பான காப்புரிமைகள் அதிகரித்தன.
ஒழுங்குமுறை மற்றும் சந்தைத் தடைகள் காரணமாக வளர்ந்த தொழில்நுட்பங்கள் இருந்த போதிலும் மின்சார கட்ட ஒருங்கிணைப்பு மெதுவாக இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
அமெரிக்கா, ஜெர்மனி, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தூய்மையான எரிசக்தியில் தொழில்நுட்பத் தலைமைத்துவத்திற்காக போட்டியிடுகின்றன.