சர்வதேச எரிசக்தி முகமை உறுப்பினர்களுக்கும் (IEA - International Energy Agency) இந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான ஒரு மூலோபாயக் கூட்டாண்மைக்கான கட்டமைப்பு சமீபத்தில் கையெழுத்தானது.
இந்தக் கட்டமைப்பானது பரஸ்பர நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்பு, உறுதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும்.
இது IEA அமைப்பில் ஒரு முழு உறுப்பினராக இந்தியா உருவாவதை நோக்கிய ஒரு படியாக அமையும்.
IEA என்பது அரசுகளுக்கிடையேயான ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டமைப்பின் படி 1974 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.