TNPSC Thervupettagam

IEA முகமையின் உலகளாவிய மீத்தேன் கண்காணிப்பு அறிக்கை 2025

May 13 , 2025 16 hrs 0 min 8 0
  • சர்வதேச எரிசக்தி முகமையானது (IEA), 2025 ஆம் ஆண்டு உலகளாவிய மீத்தேன் கண்காணிப்பு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் எரிசக்தித் துறையானது சுமார் 145 மில்லியன் டன் (Mt) மீத்தேன் உமிழ்விற்குப் பங்காற்றியுள்ளது.
  • மீத்தேன் உமிழ்விற்கான மூன்று முக்கிய ஆதாரங்களில் வேளாண்மை, எரிசக்தி மற்றும் கழிவுத் துறைகள் ஆகியன அடங்கும்.
  • மனித நடவடிக்கைகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் உமிழ்வில் 35 சதவீதத்திற்கும் அதிகமானவை எரிசக்தித் துறையிலிருந்து வெளியாகுபவையாகும்.
  • சுமார் 18 மெட்ரிக் டன் மீத்தேன் உமிழ்வானது, பெரும்பாலும் உயிரி எரிபொருளின் பாரம்பரியப் பயன்பாட்டிலிருந்து அதாவது உயிரி ஆற்றலின் ஒரு முழுமையற்ற எரிப்பிலிருந்து உருவாகுபவையாகும்.
  • அல்ஜீரியா, சீனா, இந்தியா, ஈரான், ரஷ்யா, சிரியா, தாய்லாந்து மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளானது, உலகளாவிய எரிசக்தி சார்ந்த மீத்தேன் உமிழ்வில் சுமார் 45 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளன.
  • உமிழ்வுக் குறைப்பு இலக்குகளை அடைவதற்கு என்று எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைக்கு 175 பில்லியன் டாலரும் மற்றும் நிலக்கரித் துறைக்கு 85 பில்லியன் டாலர் முதலீடும் தேவைப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்