TNPSC Thervupettagam

IEA மூலம் உலகளாவிய எண்ணெய் இருப்பு வெளியீடு

March 14 , 2026 3 days 47 0
  • மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தின் காரணமாக சர்வதேச எரிசக்தி முகமை (IEA) 400 மில்லியன் பீப்பாய்கள் அவசரகால எண்ணெயை வெளியிடும்.
  • உறுப்பு நாடுகளின் மூலோபாய இருப்புக்களில் இருந்து மேற்கொள்ளப்படும் இந்த வெளியீடு, IEA வரலாற்றிலேயே மிகப்பெரியதாகும்.
  • IEA உறுப்பு நாடுகள் 1.2 பில்லியன் பீப்பாய்கள் பொது அவசரகால எண்ணெயையும், அரசாங்க விதிகளின் கீழ் சுமார் 600 மில்லியன் பீப்பாய்கள் தொழில்துறை இருப்புக்களையும் கொண்டுள்ளன.
  • அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் பாரசீக வளைகுடாவில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் தங்களது இருப்பின் ஒரு பகுதியை வெளியிடும்.
  • பிராந்தியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை நிலைப்படுத்துவதை இந்த வெளியீடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்மஸ் நீர்ச்சந்தி பாதிக்கப் பட்டு உள்ளதால், எண்ணெய் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்