புது டெல்லியில் சர்வதேச மின் தொழில்நுட்ப ஆணையத்தின் (IEC) 89வது பொதுக் கூட்டத்தை (GM) இந்தியா நடத்த உள்ளது.
இதற்கு முன்னதாக 1960, 1997 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டதுடன், IEC GM கூட்டத்தினை இந்தியா நடத்துவது இது நான்காவது முறையாகும்.
உலக மக்கள்தொகையில் 99% பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 170 நாடுகள் IEC ஆணையத்தின் உறுப்பினர் பட்டியலில் உள்ளதால் இது உலக வர்த்தகத்தில் சுமார் 20% மதிப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நிலைத்தன்மை, செயற்கை நுண்ணறிவு சார்ந்த புத்தாக்கம், மின்சாரப் போக்குவரத்து இயக்கம் மற்றும் உள்ளடக்கிய தரநிலைகள் போன்ற முக்கிய கருத்துருக்களில் 150க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் குழு கூட்டங்கள் மற்றும் பயிலரங்கங்களை GM நடத்த உள்ளது.
1906 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட IEC, உலகம் முழுவதும் 30,000 நிபுணர்களின் ஆதரவுடன், மின்சாரம், மின்னணு மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில் நுட்பங்களுக்கான சர்வதேச தரநிலைகளில் உலகளாவிய தலைமைத்துவத்தினைக் கொண்டுள்ளது.