IFCN நிறுவனத்தின் உலகப் பால் பண்ணைச் செயற்பாட்டாளர்கள் தரவரிசை
December 7 , 2020 1713 days 604 0
பால்வள நிறுவனமான அமுல் நிறுவனமானது முன்னிலையில் உள்ள 20 உலகளாவிய பால் பண்ணைச் செயற்பாட்டாளர்களிடையே 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
இது ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்படும் பால் கொள்முதலின் அளவைப் பொறுத்து மேற்கொள்ளப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் பால் பண்ணை விவசாயிகள் இந்தப் பட்டியலின் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
இதற்கு அடுத்து நியூசிலாந்தின் போன்டெரா, பிரெஞ்சு நிறுவனமான குரூப்பி லாக்டாலிஸ், டென்மார்க் நாட்டின் அர்லா புட்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தின் நெஸ்லே ஆகியவை இடம் பெற்றுள்ளன.
அமுல் என்பது குஜராத்தின் ஆனந்த்தில் உள்ள ஒரு இந்தியப் பால்வள கூட்டுறவுச் சங்கமாகும்.
அமுல் நிறுவனமானது 1946 ஆம் ஆண்டில் சர்தார் வல்லபாய் படேலின் வழிகாட்டுதலின் பேரில் திரிபுவன்தாஸ் படேல் அவர்களால் தொடங்கப் பட்டுள்ளது.
அமுல் நிறுவனமானது இந்தியாவின் வெண்மைப் புரட்சிக்கு ஊக்கமளித்தது.
வெண்மைப் புரட்சி அல்லது வெண்மை (வெள்ளம்) நடவடிக்கையானது 1970 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டுள்ளது.
இது இந்தியாவை உலகின் மிகப்பெரிய பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியாளர் நாடாக மாற்றியுள்ளது.