IIBX தளத்தில் சிறப்புப் பிரிவு வாடிக்கையாளர் - SBI
November 6 , 2025 16 hrs 0 min 8 0
பாரத் ஸ்டேட் வங்கி இந்திய சர்வதேச விலையுயர்ந்த உலோகங்களின் பரிமாற்ற (புல்லியன் எக்ஸ்சேஞ்ச்) (IIBX) தளத்தில் ஒரு சிறப்புப் பிரிவு வாடிக்கையாளராக (SCC) அதன் தொடக்க தங்க வர்த்தகத்தைச் செயல்படுத்தியது.
2024 ஆம் ஆண்டில் IIBX தளத்தில் வர்த்தகம் மற்றும் தீர்வு (TCM) உறுப்பினரான முதல் வங்கி SBI ஆகும்.
ஒரு சிறப்புப் பிரிவு வாடிக்கையாளராக, SBI வங்கி நிறுவனமானது நகைக்கடை நிறுவனங்கள், விலையுயர்ந்த உலோகங்களின் ஒப்பந்தாரர்கள் மற்றும் பிற பங்கு தாரர்களுக்கு தங்க/புல்லியன் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.
இந்தியாவின் தங்க இறக்குமதி முறையில் செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் அணுகலை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
SBI நிறுவனத்தின் பங்கேற்பு GIFT நகரத்தை உலகளாவிய நிதி மையமாக மேம்படுத்தி, தங்க வர்த்தகத்தை நவீனமயமாக்குவதற்கான அரசாங்க முன்னெடுப்புகளுடன் ஒருங்கிணைகிறது.