TNPSC Thervupettagam

IIBX தளத்தில் சிறப்புப் பிரிவு வாடிக்கையாளர் - SBI

November 6 , 2025 16 hrs 0 min 5 0
  • பாரத் ஸ்டேட் வங்கி இந்திய சர்வதேச விலையுயர்ந்த உலோகங்களின் பரிமாற்ற (புல்லியன் எக்ஸ்சேஞ்ச்) (IIBX) தளத்தில் ஒரு சிறப்புப் பிரிவு வாடிக்கையாளராக (SCC) அதன் தொடக்க தங்க வர்த்தகத்தைச் செயல்படுத்தியது.
  • 2024 ஆம் ஆண்டில் IIBX தளத்தில் வர்த்தகம் மற்றும் தீர்வு (TCM) உறுப்பினரான முதல் வங்கி SBI ஆகும்.
  • ஒரு சிறப்புப் பிரிவு வாடிக்கையாளராக, SBI வங்கி நிறுவனமானது நகைக்கடை நிறுவனங்கள், விலையுயர்ந்த உலோகங்களின் ஒப்பந்தாரர்கள் மற்றும் பிற பங்கு தாரர்களுக்கு தங்க/புல்லியன் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.
  • இந்தியாவின் தங்க இறக்குமதி முறையில் செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் அணுகலை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
  • SBI நிறுவனத்தின் பங்கேற்பு GIFT நகரத்தை உலகளாவிய நிதி மையமாக மேம்படுத்தி, தங்க வர்த்தகத்தை நவீனமயமாக்குவதற்கான அரசாங்க முன்னெடுப்புகளுடன் ஒருங்கிணைகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்