தொழில்துறை உற்பத்திக் குறியீட்டை (IIP) தொகுப்பில், தொழிற்சாலைகளை மாற்றுவது குறித்த விவாதக் கட்டுரை 1.0 அறிக்கையினை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்டது.
MoSPI, வழிமுறைகளைப் புதுப்பித்தல், புதிய தரவு மூலங்களை ஆராய்தல் மற்றும் நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்தல் மூலம் IIP அடிப்படைத் தொடரைத் திருத்தி வருகிறது.
தற்போதையக் குழுவில் உள்ள சில தொழிற்சாலைகள் செயல்படாமல் இருக்கலாம் அல்லது உற்பத்தியை மாற்றியிருக்கலாம், எனவே தரவுத் தொடரில் தொடர்ச்சியைப் பேண மாற்றீடு தேவைப்படுகிறது.
அத்தகையத் தொழிற்சாலைகளை ஒரே பொருள் அல்லது பொருள் குழுவை உற்பத்தி செய்யும் பொருத்தமான மாற்றீடுகளுடன் மாற்றுவதற்கான முன்மொழியப்பட்ட வழி முறையை இந்த ஆய்வறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.