இந்திய வானிலை ஆய்வு மையமானது (India Meteorological Department - IMD) 2019 ஆம் ஆண்டின் காலநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகள் இந்தியாவைப் பொறுத்த வரையில் மிகவும் வெப்பமான ஆண்டுகளாக இருந்துள்ளன.
1901 ஆம் ஆண்டிலிருந்து, 2019 ஆம் ஆண்டானது ஏழாவது வெப்பமான ஆண்டாக இருந்துள்ளது.
2019 ஆம் ஆண்டின் வருடாந்திர மழைப் பொழிவானது 1961 – 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தின் நீண்ட கால சராசரியில் 109% ஆக இருந்தது.
1902 ஆம் ஆண்டிலிருந்து, 2019 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான சூறாவளிகள் அரேபியக் கடலில் உருவாகியுள்ளன. அரேபியக் கடலில் இருந்து இந்த ஆண்டு ஐந்து சூறாவளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சராசரியாக இங்கு ஒரு ஆண்டில் உருவாகும் சூறாவளிகளின் எண்ணிக்கை ஒன்று ஆகும்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிடையே தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் அதிக இறப்புகள் பீகார் மாநிலத்தில் (650) பதிவாகியுள்ளன.
1902 ஆம் ஆண்டிலிருந்து, இந்த ஆண்டில் புது தில்லியானது மிக நீண்ட குளிர் காலத்தை (18 நாட்கள்) பதிவு செய்துள்ளது.