இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) ஆனது, வெவ்வேறு வானிலை சூழ்நிலைகளுக்கு பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கைகளை வெளியிடுகிறது.
மழை, இடியுடன் கூடிய மழை, பனிப்பொழிவு, ஆலங்கட்டி மழை, தூசிப் புயல்கள், வெப்ப அலைகள் மற்றும் குளிர் அலைகளுக்கு இந்த எச்சரிக்கைகள் பயன்படுத்தப் படுகின்றன.
பச்சை நிற எச்சரிக்கை என்பது லேசான மழையைக் குறிக்கிறது, எனவே எந்த எச்சரிக்கையும்/ஆலோசனையும் தேவையில்லை; மஞ்சள் எச்சரிக்கை என்பது எச்சரிக்கையாக இருக்க வேண்டியதைக் குறிக்கிறது.
ஆரஞ்சு எச்சரிக்கை என்பது கடுமையான வானிலைக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதையும், மேலும் சிவப்பு எச்சரிக்கை என்பது மிகவும் ஆபத்தான வானிலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
பச்சை (<64 மிமீ), மஞ்சள் (64.5–115.5 மிமீ), ஆரஞ்சு (115.6–204.4 மிமீ), மற்றும் சிவப்பு (>204.5 மிமீ) ஆகிய மழைப்பொழிவு எச்சரிக்கைகள் ஆனது, 24 மணி நேர மழைப் பொழிவினை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) என்பது இந்திய அரசின் புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு இந்திய நிறுவனமாகும்.