TNPSC Thervupettagam

IMDன் காலநிலை குறித்த அறிக்கை 2019

January 10 , 2020 2047 days 808 0
  • இந்திய வானிலை ஆய்வு மையமானது (India Meteorological Department - IMD) 2019 ஆம் ஆண்டின் காலநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • கடந்த பத்தாண்டுகள் இந்தியாவைப் பொறுத்த வரையில் மிகவும் வெப்பமான ஆண்டுகளாக இருந்துள்ளன.
  • 1901 ஆம் ஆண்டிலிருந்து, 2019 ஆம் ஆண்டானது ஏழாவது வெப்பமான ஆண்டாக இருந்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டின் வருடாந்திர மழைப் பொழிவானது 1961 – 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தின் நீண்ட கால சராசரியில் 109% ஆக இருந்தது.
  • 1902 ஆம் ஆண்டிலிருந்து, 2019 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான சூறாவளிகள் அரேபியக் கடலில் உருவாகியுள்ளன. அரேபியக் கடலில் இருந்து இந்த ஆண்டு ஐந்து சூறாவளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • சராசரியாக இங்கு ஒரு ஆண்டில் உருவாகும் சூறாவளிகளின் எண்ணிக்கை ஒன்று ஆகும்.
  • இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிடையே தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் அதிக இறப்புகள் பீகார் மாநிலத்தில் (650) பதிவாகியுள்ளன.
  • 1902 ஆம் ஆண்டிலிருந்து, இந்த ஆண்டில் புது தில்லியானது மிக நீண்ட குளிர் காலத்தை (18 நாட்கள்) பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்