சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி V. சுப்பிரமணியன் தனது பதவிக் காலமானது முடிவதற்குள் அரசாங்கத்தினால் இந்தியாவிற்குத் திரும்ப அழைக்கப் பட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு நிர்வாக இயக்குநராக (இந்தியா சார்பில்) அவரை அப்பதவியில் இருந்து "உடனடியாக" நீக்குவதற்கு என்று அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
IMF அமைப்பானது இந்தியா, வங்காளதேசம், பூடான் மற்றும் இலங்கைக்கான நிர்வாக இயக்குநர் (ED) பதவி "காலியானதாக" தற்போது குறிப்பிட்டுள்ளது.
IMF அமைப்பின் தினசரி அன்றாட நடவடிக்கைகளை நடத்துவதற்கு நிர்வாக வாரியம் பொறுப்பு கொண்டுள்ளது.
இது உறுப்பினர் நாடுகள் அல்லது நாடுகளின் குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நிர்வாக இயக்குநர்களையும், அதன் தலைவராகப் பணியாற்றும் வகையில் நிர்வாக இயக்குநரையும் கொண்டுள்ளது.
இந்த வாரியம் ஆனது வழக்கமாக ஒவ்வொரு வாரமும் பல முறை கூடுகிறது.