TNPSC Thervupettagam

IMF-இன் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டப் புதுப்பிப்பு

July 18 , 2026 9 days 104 0
  • சர்வதேச நாணய நிதியம் (IMF) 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் (WEO) புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை “Global Economy in Crosscurrents of War and Technology” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கை உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை 2026 ஆம் ஆண்டில் 3.0% ஆகவும், 2027 ஆம் ஆண்டில் 3.4% ஆகவும் கணித்துள்ளது. மேலும், புவிசார் அரசியல் பதற்றங்களால் வளர்ச்சி பாதிக்கப்படும் அதே வேளையில், தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகள் அதற்கு ஆதரவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
  • உலகப் பொருளாதாரத்தை வடிவமைக்கும் இரண்டு முக்கிய சக்திகளாக, மத்திய கிழக்கு மோதலின் தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்ப முதலீடுகளால் உந்தப்படும் வளர்ச்சி ஆகியவற்றை இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
  • எரிசக்தி விலை அழுத்தங்கள் காரணமாக 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பண வீக்கக் கணிப்பை 4.7% ஆக IMF திருத்தியுள்ளதால், உலகளாவிய பணவீக்கம் தொடர்ந்து ஒரு கவலையாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • வலுவான உள்நாட்டுத் தேவையால் ஆதரிக்கப்பட்டு, 2026-27 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி சுமார் 6.4% ஆகக் கணிக்கப் பட்டுள்ளதுடன் இதன்மூலம் அதிவேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என்று கணிக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்