பிரான்சு, ஸ்பெயின் மற்றும் இத்தாலிய நாட்டுக் கடற்படைகளின் போர்க் கப்பல்களை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியக் கடற்படையுடனான ஒரு கூட்டுப் பயிற்சியில் இந்தியக் கடற்படையானது முதல்முறையாக பங்கேற்றுள்ளது.
இது ஏடன் வளைகுடாவில் நடைபெற்றது.
இந்தியக் கடற்படையின் கப்பலான திரிகந்த் எனும் கப்பல் இந்தப் பயிற்சியில் பங்கேற்றது.