இஸ்ரோவின் ஒரு வணிகப் பிரிவான இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) ஆனது, Satellite Bus as a Service (SBaaS) எனும் முக்கிய முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது செயற்கைக்கோள் உருவாக்கத்தில் தனியார் துறையின் பெரும்பங்களிப்பை மிக நன்கு ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது இந்திய அரசு சாரா நிறுவனங்களால் (NGEs) வடிவமைக்கப்பட்டச் சாதனங்களை சுமந்து செல்வதற்கான சிறிய செயற்கைக்கோள் ஏவுகலன்களை உருவாக்கும்.
இந்த SBaaS என்ற புதிய மாதிரியானது, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக வேண்டி ஏவப்படத் தயாரான நிலையிலான செயற்கைக்கோள் தளங்களுக்கான அணுகலை எளிதாக்கும்.