உலகச் சுரங்க மாநாட்டின் (INC-WMC) இந்திய தேசிய குழுவானது பொறுப்பான சுரங்க நடவடிக்கைகள் குறித்து ஐதராபாத்தில் ஒரு மாநாட்டை நடத்தியது.
இது 'சிறந்தச் சுரங்க மூடல் நடைமுறைகள் மூலம் நிலையான மற்றும் பொறுப்பான சுரங்க நடவடிக்கைகள்' என்ற கருத்துருவில் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் சில முக்கிய வெளியீடுகளில் பசுமை நடவடிக்கை குறித்த கையேடு, தாமிரம் மற்றும் அலுமினியம் குறித்த கொள்கை ஆவணங்கள் 2025 மற்றும் RECLAIM கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.
சுரங்கத் தொழில் துறைக்கு உதவுவதற்காக என்று, ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஒற்றைச் சாளர அனுமதி வழங்கீட்டு அமைப்பு போன்ற சில புதிய செயற்கருவிகளும் தொடங்கப் பட்டன.