மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் மீனாட்சி லேகி, “India’s Women Unsung Heroes” என்ற ஒரு சித்திரப் படப் புத்தகத்தினை வெளியிட்டு உள்ளார்.
தேசத்தின் மறக்கப்பட்ட சில பெண் விடுதலை வீராங்கனைகளுக்கு அர்ப்பணிக்கும் விதமாக இப்புத்தகமானது வெளியிடப் பட்டுள்ளது.
இந்தப் புத்தகமானது அமர் சித்ர கதா என்ற அமைப்புடன் இணைந்து கலாச்சாரத் துறை அமைச்சகத்தினால் தயாரிக்கப் பட்டுள்ளது.
இந்தப் புத்தகமானது சகாலி இலாமா, பத்மஜா நாயுடு, துர்காபாய் தேஷ்முக் போன்ற இந்தியாவின் 75 பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாற்றைப் போற்றுகிறது.