முதலாவது இந்தியா-கானா நாடுகளின் வெளியுறவு அலுவலக ஆலோசனைகள் கடந்த ஆகஸ்ட் 28 அன்று புதுடெல்லியில் நடைபெற்றது.
இந்தியக் குடியரசுத் தலைவர் ஜுன் 2016ல் கானாவிற்கு பயணம் மேற்கொண்டார்.
சர்வதேச சூரியஒளிக் கூட்டிணைவின் தொடக்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கானா நாட்டின் குடியரசுத் தலைவர் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
வர்த்தகம் மற்றும் முதலீடு, மேம்பாட்டுக் கூட்டாண்மை, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மருத்துவ துறை, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி, மக்கள் தொடர்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.