TNPSC Thervupettagam

India1 பணவழங்கீட்டுச் சேவை நிறுவனம்

December 2 , 2021 1613 days 789 0
  • India1 பணவழங்கீட்டுச் சேவை நிறுவனமானது India1ATMS“ எனப்படும் வெள்ளைக் குறிப்பீட்டு அடையாளம் கொண்ட 10,000 அளவிலான தானியங்கு பண வழங்கீட்டு இயந்திரங்களை (ஏ.டி.எம்) நிறுவி புதிய மைல்கல்லைக் கடந்துள்ளது.
  • India1 நிறுவனமானது ஆஸ்திரேலியாவின் பாங்க்டெக் குழுமத்தால் ஆதரிக்கப்படும் ஒரு நிறுவனமாகும்.
  • இந்த நிறுவனமானது இதற்கு முன்பாக BTI Payments என அறியப்பட்டது.
  • 10000 ஏ.டி.எம்களை நிறுவியதன் மூலம், இத்துறையில் மாபெரும் நிறுவனமாக India1 நிறுவனம் உருவெடுத்துள்ளது.
  • India1 ஏ.டி.எம். ஆனது பகுதியளவு நகர்ப்புறப் பகுதிகளிலும் மற்றும் கிராமப்புறப் பகுதிகளிலும் 2வது மிகப்பெரிய வெள்ளைக் குறியீட்டு அடையாளம் உடைய ஏ.டி.எம். நிறுவனமாக மாறியுள்ளது.
  • வங்கி சாரா நிறுவனங்களால் நிறுவப்பட்டு, உரிமம் பெற்று இயக்கப்படும் தானியங்கு  பண வழங்கீட்டு இயந்திரங்கள் வெள்ளைக் குறியீட்டு அடையாளம்  உடைய ஏ.டி.எம். இயந்திரங்கள் ஆகும்.
  • இந்தியாவில் 1956 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்கள் இந்த வெள்ளைக் குறியீட்டு அடையாளத்தினைக் கொண்டு உள்ள ஏ.டி.எம் இயந்திரங்களை இயக்க அனுமதிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்