India1 பணவழங்கீட்டுச் சேவை நிறுவனமானது “India1ATMS“ எனப்படும் வெள்ளைக் குறிப்பீட்டு அடையாளம் கொண்ட 10,000 அளவிலான தானியங்கு பண வழங்கீட்டு இயந்திரங்களை (ஏ.டி.எம்) நிறுவி புதிய மைல்கல்லைக் கடந்துள்ளது.
India1 நிறுவனமானதுஆஸ்திரேலியாவின் பாங்க்டெக் குழுமத்தால் ஆதரிக்கப்படும் ஒரு நிறுவனமாகும்.
இந்த நிறுவனமானது இதற்கு முன்பாக BTI Payments என அறியப்பட்டது.
10000 ஏ.டி.எம்களை நிறுவியதன் மூலம், இத்துறையில் மாபெரும் நிறுவனமாக India1 நிறுவனம் உருவெடுத்துள்ளது.
India1 ஏ.டி.எம். ஆனது பகுதியளவு நகர்ப்புறப் பகுதிகளிலும் மற்றும் கிராமப்புறப் பகுதிகளிலும் 2வது மிகப்பெரிய வெள்ளைக் குறியீட்டு அடையாளம் உடைய ஏ.டி.எம். நிறுவனமாக மாறியுள்ளது.
வங்கி சாரா நிறுவனங்களால் நிறுவப்பட்டு, உரிமம் பெற்று இயக்கப்படும் தானியங்கு பண வழங்கீட்டு இயந்திரங்கள் வெள்ளைக் குறியீட்டு அடையாளம் உடைய ஏ.டி.எம். இயந்திரங்கள் ஆகும்.
இந்தியாவில் 1956 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்கள் இந்த வெள்ளைக் குறியீட்டு அடையாளத்தினைக் கொண்டு உள்ள ஏ.டி.எம் இயந்திரங்களை இயக்க அனுமதிக்கப்படுகின்றன.