ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் தேசிய ஆடை வடிவமைப்புக் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து, அளவு நிலைகளில் உள்ள குழப்பத்தைப் போக்கும் பொருட்டு இந்தியா அளவு என்ற கணக்கெடுப்பினைத் தொடங்கியுள்ளன.
இதற்கு INDIASize எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆயத்த ஆடைத் துறையில் ஒரு புதிய தரப்படுத்தப்பட்ட அளவு அட்டவணையினை அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு இந்த முன்னெடுப்பானது தொடங்கப் பட்டுள்ளது.
தற்போது 18 நாடுகள் மட்டுமே தங்களது சொந்த அளவு அட்டவணைகளைக் கொண்டுள்ளன.