ரஷ்யாவில் கட்டுமானத்தில் உள்ள ரேடாருக்குப் புலப்படாத போர்க்கப்பலான தமால் ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இயக்கப்பட உள்ளது.
இந்திய நாட்டிற்கு வெளியே வேறொரு நாட்டில் செயலாக்கப்படுகின்ற அல்லது அங்கு இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற கடைசி போர்க்கப்பலாக தமால் இருக்கும்.
இது ரேடாருக்குப் புலப்படாத நான்கு போர்க் கப்பல்களை கட்டமைப்பதற்கான சுமார் 2.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்பதோடு அவற்றில் இரண்டு கப்பல்கள் ரஷ்யாவிலும் இரண்டு கப்பல்கள் கோவாவிலும் கட்டமைக்கப்படுகின்றன.
இந்த ரகத்திலான கப்பலில் முதலாவது கப்பலான INS துஷில் என்பது, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் படையில் இணைக்கப்பட்டது.