INS உதயகிரி மற்றும் INS ஹிம்கிரி ஆகிய ரேடாருக்குப் புலப்படாத பல்துறை போர்க் கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டன.
இந்தக் கப்பல்கள் சுமார் 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன.
இந்தப் போர்க்கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முதல் எதிர் நடவடிக்கை அமைப்பாகவும், அதிகம் தேர்வு செய்யப்படும் பாதுகாப்பு அமைப்பாகவும் இந்தியக் கடற்படையின் பங்கை வலுப்படுத்துகின்றன.
வங்காள விரிகுடா மற்றும் அதற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் விரைவான எதிர் நடவடிக்கையையும், பாதுகாப்பான கடல் பாதைகளையும் மேம்படுத்துவதற்காக இந்த இரு கப்பல்களும் கிழக்குக் கடற்படையில் இணைக்கப்படுகின்றன.