இந்தியக் கடற்படையானது கொல்கத்தாவில் மேம்பட்ட வழிகாட்டப்பட்ட எறிகணை தாங்கிய போர்க்கப்பலான INS ஹிம்கிரி கப்பலைப் பெற்றது.
ஹிம்கிரி என்பது 17A திட்டத்தின் மூன்றாவது கப்பலாகும். மேலும் போர்க்கப்பல் வடிவமைப்பு வாரியம் (WDB) வடிவமைத்த GRSE நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்ட அதன் வகுப்பில் முதல் கப்பலாகும்.
இந்தக் கப்பலில் வான் வழி மேற்பரப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் போர்த் திறனுடன் பிரம்மோஸ் சீர்வேக எறிகணைகள் மற்றும் பராக் 8 ஆனது வான் வழிப் பாதுகாப்பு எறிகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.
30 ஆண்டு கால சேவைக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் படையில் இருந்து நீக்கப்பட்ட லியாண்டர் வகுப்பு போர்க்கப்பலான INS ஹிம்கிரியின் பெயரை ஹிம்கிரி மீண்டும் பெறுகிறது.