கோவிட் – 19 தொற்றினை எதிர்ப்பதற்காக இந்தியா தனது SARS – CoV – 2 மரபணு குழும வலையமைப்பினை அண்டை நாடுகளுக்கும் விரிவுபடுத்துவதாக இந்தியா சமீபத்தில் அறிவித்தது.
INSACOG என்பது மரபணுப் பகுப்பாய்வு மற்றும் கண்காணிப்பிற்கான ஆய்வகங்களின் ஒரு வலையமைப்பு ஆகும்.
TRIPS முறையினைத் தள்ளுபடி செய்யும் ஒரு திட்டத்தினை அமல்படுத்துவதற்காகவும் வேண்டி இந்தியா செயலாற்றும்.
பிராந்தியச் சந்தைகளில் அதன் உள்நாட்டு உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்காக வேண்டி தென் ஆப்பிரிக்காவினால் இதற்கு ஆதரவு அளிக்கப் படுகின்றது
இந்தியா 97 நாடுகள் மற்றும் 2 ஐ.நா. அமைப்புகளுக்கு 162 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
இதில் மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளும் அடங்கும்.
2022 ஆம் ஆண்டில் இந்திய – பசிபிக் பகுதிகளில் கோவிட் – 19 தடுப்பூசிகளை விநியோகிப்பதற்காக இந்தியா குவாட் நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது.