TNPSC Thervupettagam

INSV கௌண்டின்யா

December 29 , 2025 2 days 54 0
  • INSV கௌண்டின்யா என்பது இந்தியக் கடற்படையின் கையால் தைக்கப்பட்ட பாய்மரத்தைக் கொண்ட கப்பலாகும் என்பதோடு, அஜந்தா குகை சுவரோவியங்களில் 5 ஆம் நூற்றாண்டின் கப்பல் சித்தரிப்புகளால் இது ஈர்க்கப்பட்டது.
  • குஜராத்தின் போர்பந்தரிலிருந்து ஓமனின் மஸ்கட் வரையிலான தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இது மேற்கொள்ளும்.
  • இந்தக் கப்பல் ஆனது பாரம்பரிய தையல்-பலகை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதோடு, இதில் மரப் பலகைகள் தேங்காய் நார் கயிற்றைப் பயன்படுத்தி தைக்கப்பட்டு இயற்கையான கோந்துகளால் பிணைக்கப் பட்டுள்ளன.
  • இந்தத் திட்டம் ஆனது கலாச்சார அமைச்சகம், இந்தியக் கடற்படை மற்றும் ஹோடி கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முத்தரப்பு ஒப்பந்தத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டது.
  • தென்கிழக்கு ஆசியாவுடனான இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடல்சார் தொடர்புகளை அடையாளப்படுத்தும் பண்டைய இந்திய மாலுமி கௌண்டின்யாவின் பெயரால் INSV கௌண்டின்யா கப்பலுக்கு பெயரிடப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்