TNPSC Thervupettagam

INSV கௌண்டின்யாவின் வரலாற்றுப் பயணம்

December 16 , 2025 2 days 23 0
  • INSV கௌண்டின்யாவின் பண்டையக் கடல் பாதை முன்னெடுப்பு என்பது பண்டைய கடல் வர்த்தக பாதையை மீண்டும் உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகும்.
  • INSV கௌண்டின்யா இந்தியாவிலிருந்து மஸ்கட்டுக்கு ஒரு வரலாற்றுப் பயணத்திற்குத் தயாராகி வருகிறது.
  • இது 5 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த இந்திய வணிகக் கப்பலின் கையால் தைக்கப் பட்ட மரப் பிரதியாகும்.
  • தேங்காய் நாரினால் ஆன கயிறு, மீன் எண்ணெய் மற்றும் இயற்கை மரக் கோந்து / பிசின் ஆகியவற்றைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இந்தக் கப்பலில் நவீனக் கட்டமைப்பு பொருட்கள் எதுவும் இல்லை.
  • இது அஜந்தா குகை ஓவியங்களில் காணப்படும் கப்பல் சித்தரிப்புகளின் அடிப்படையில் கோவாவின் திவார் தீவில் கட்டமைக்கப்பட்டது.
  • இந்தப் பயணமானது குஜராத்தின் போர்பந்தரிலிருந்து ஓமனின் மஸ்கட்டுக்கு, பண்டையக் கடல் வர்த்தக இணைப்புகளை மீண்டும் இணைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்