2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அர்ஜென்டினா அணியானது புயூர்ட்டோ ரிக்கோ அணியை 6–0 என்ற கணக்கில் வென்றதையடுத்து, ஆடவர்களுக்கான சர்வதேசக் கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்ஸி 60 கோல் அசிஸ்ட்களுடன் (கோல் எடுக்க பந்தினை மாற்றுவதற்கான உதவி) புதிய சாதனையை படைத்துள்ளார்.
மெஸ்ஸியின் முதல் சர்வதேச அசிஸ்ட் ஆனது 2006 ஆம் ஆண்டில் FIFA உலகக் கோப்பைப் போட்டியில் அர்ஜென்டினா அணி, செர்பியா மற்றும் மாண்டினீக்ரோ அணியை 6–0 என்ற கணக்கில் வென்ற போது பதிவு செய்யப் பட்டது.
பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மற்றொரு 6-0 என்ற கோல் கணக்கிலான வெற்றியில் அசிஸ்ட் சாதனையை முறியடித்தார் என்ற நிலையில் இது கால்பந்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
ஆடவர் சர்வதேசக் கால்பந்துப் போட்டியில் தற்போதைய சிறந்த அசிஸ்ட் வீரர்கள்: மெஸ்ஸி (60), நெய்மர் (58), டோனோவன் (58), புஸ்காஸ் (53), டி ப்ரூய்ன் (52) ஆகியோர் ஆவர்.
38 வயதான மெஸ்ஸி தற்போது தனது ஒட்டு மொத்த தொழில்முறை வாழ்க்கையில் 400 அசிஸ்ட்களை எட்டுவதற்கு இரண்டு அசிஸ்ட்கள் மட்டுமே உள்ளன.