இந்திய நகரங்களுக்கான நுண்ணறிவு சார் போக்குவரத்து அமைப்பு முன்னெடுப்பின் இரண்டாம் கட்டத்தின் கீழ், இந்தியப் போக்குவரத்துச் சூழலமைவிற்கான உள் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்புகள் என்ற ஒரு தீர்வினை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
இந்திய நகரங்களுக்கான நுண்ணறிவு சார் போக்குவரத்து அமைப்பு முன்னெடுப்பு (InTranSe) என்பது தேசிய அளவிலான கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டம் ஆகும்.
InTranSE-II என்பது இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் (MeitY) ஒரு முன்னெடுப்பாகும்.