சர்வதேசப் புலம்பெயர்வு அமைப்பானது (IOM) உலகளாவிய வேண்டுகோள் 2026 அறிக்கையை வெளியிட்டது.
இது 2026 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள 41 மில்லியன் மக்களுக்கு உதவுவதற்காக 4.7 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கோருகிறது.
இந்த அறிக்கை, புலம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பாதுகாப்பான புலம் பெயர்வை ஊக்குவிப்பதற்கும் உருவாக்கப்பட்ட IOMன் 2024-2028 மூலோபாயத் திட்டத்துடன் ஒத்துப் போகிறது.
2024 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் புலம்பெயர்வு 83.4 மில்லியன் மக்களை எட்டியது என்ற நிலையில்இது உலகளவில் இது வரையில் பதிவு செய்யப்பட்டதிலேயே மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
பேரிடர் தொடர்பான புலம்பெயர்வு 2024 ஆம் ஆண்டில் 9.8 மில்லியனாக உயர்ந்தது என்ற நிலையில்இது முந்தைய ஆண்டை விட 29% அதிகரிப்பைக் காட்டுகிறது.
புலம்பெயர்ந்தோர் 2024 ஆம் ஆண்டில் 905 பில்லியன் அமெரிக்க டாலர்களை சர்வதேசப் பணப் பரிமாற்றமாக அனுப்பியுள்ளனர் என்ற நிலையில்இது பல பொருளாதாரங்களுக்கு ஆதரவளிக்கிறது.
உலகளவில் சுமார் 168 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர், இவர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்கின்றனர்.