IPC-ன் கீழ் மாற்றுப் பாலினத்தவர் பாலியல் வழக்குப் பதிவு செய்ய அனுமதி
January 4 , 2019 2405 days 727 0
சமீபத்தில் தில்லி உயர்நீதி மன்றமானது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354A என்ற விதியின் (Indian Penal Code - IPC) கீழ் மாற்று பாலினத்தவர்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு வழக்குப் பதிவு செய்ய முடியும் என உத்தரவிட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல் மற்றும் அதற்கான தண்டனைகளைப் பற்றி இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354A கூறுகிறது.
இந்த உத்தரவானது ஒரு மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த மாணவரின் பாலியல் துன்புறுத்தல் புகாரைப் பதிவு செய்வதற்கு பொருத்தமான தண்டனைப் பிரிவு இல்லையென காவல்துறையால் மறுக்கப்பட்டதின் விளைவாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.