IPL போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு
September 2 , 2025
20 days
64
- மூத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் இரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளிலிருந்து (IPL) ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- ஒட்டு மொத்தமாக, 221 IPL போட்டிகளில் பங்கேற்ற அவர், சிறந்த 4/34 ரன்களுடன், 30.22 சராசரியுடன் 187 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- பேட்டிங்கில், அதிகபட்சமாக 50 ரன்கள் மற்றும் சராசரியாக 13.02 ரன்களுடன் அவர் 833 ரன்கள் எடுத்தார்.
- 38 வயதான அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலிய டூர் போட்டிகளின் போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
- டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவுக்கு (619) அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை (537) வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையினைப் பெற்றார்.
Post Views:
64