TNPSC Thervupettagam

IPRS 3.0 அமைப்பு

September 25 , 2025 15 hrs 0 min 21 0
  • மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் புது டெல்லியில் தொழில்துறை பூங்கா மதிப்பீட்டு அமைப்பு (IPRS) 3.0 அமைப்பினைத் தொடங்கி வைத்தார்.
  • இந்த அமைப்பை ஆசிய மேம்பாட்டு வங்கியின் (ADB) ஆதரவுடன் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) உருவாக்கியுள்ளது.
  • IPRS 3.0 ஆனது இந்தியா முழுவதும் உள்ள தொழில்துறைப் பூங்காக்களின் உள் கட்டமைப்பு, வசதிகள் மற்றும் போட்டித்தன்மையை மதிப்பிடுவதை சில முக்கிய அளவுருக்களாகக் கொண்டிருப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பூங்காக்கள் ஆனது நிலைத்தன்மை, தளவாடங்கள், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் குத்தகைதாரர்களின் கருத்துரைப்பு உள்ளிட்ட முக்கியக் குறிகாட்டிகளின் அடிப்படையில் தலைவர்கள், சவால் போட்டியாளர்கள் அல்லது ஆர்வலர்கள் என வகைப்படுத்தப்படும்.
  • இந்த அமைப்பானது, முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுக் கழகத்தின் (NICDC) கீழ் கணினியுடன் இணைக்கப்பட்டு இயக்கப்படும் 20 தொழில்துறைப் பூங்காக்களின் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கவும் உதவும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்