IQAir தரவுகள் - 2020 உலகக் காற்றுத் தரநிர்ணய அறிக்கை
November 25 , 2021 1266 days 649 0
காற்றின் தரமானது pm2.5, pm10, ஓசோன், சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றின் அளவை மதிப்பிடுவதன் மூலம் நிர்ணயிக்கப் படுகிறது.
2020 ஆம் ஆண்டில் உலகின் மிக மாசடைந்த 100 நகரங்களில் 46 நகரங்கள் இந்திய நகரங்களாகும்.
இந்தியாவைத் தொடர்ந்து சீனா (42 நகரங்களுடன்), பாகிஸ்தான் (6 நகரங்களுடன்), வங்காளதேசம் (4 நகரங்களுடன்) ஆகியவை உள்ளன.
உலகளவில் முன்னணியிலுள்ள மிகவும் மாசடைந்த 10 நகரங்களில் 9 இடங்களில் இந்திய நகரங்கள் உள்ளன.
அந்த 9 நகரங்கள் காசியாபாத், புலந்தர்ஷா, பிஸ்ராக் ஜலால்பூர், பிவடி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ மற்றும் டெல்லி ஆகியனவாகும்.
2020 ஆம் ஆண்டில் தொடர்ந்து நேரடியாக மூன்றாவது ஆண்டாக புது தில்லி உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரமாக உள்ளது.
20 முதல் 40 சதவிகிதம் வரையிலான அளவில் டெல்லியின் காற்று மாசுவானது தேசியத் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்தில் எரிக்கப் படும் பயிர்த் தாளடி எரிப்புகளில் இருந்து வருவதாக மதிப்பிடப் படுகின்றது.
2020 ஆம் ஆண்டில் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹோடான் நகரம் மிக மோசமான சராசரிக் காற்றுத் தரத்தைக் கொண்டிருந்தது.
IQAir என்பது சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்றுத்தர தொழில்நுட்ப நிறுவனமாகும்.