மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் “iRASTE” என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
இது செயற்கை நுண்ணறிவு ஆற்றல் அடிப்படையிலான ஒரு திட்டமாகும்.
சாலை விபத்துகளைக் குறைப்பதனையும், இவற்றிற்கு காரணமான காரணிகளைப் புரிந்து கொள்வதையும், அவற்றைத் தணிப்பதற்கான தீர்வுகளைக் கொண்டு வருவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
“iRASTE” என்றால் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் மூலமான சாலைப் பாதுகாப்பிற்காக வேண்டி நுண்ணறிவு சார்ந்த தீர்வுகள் என்று பொருளாகும் (Intelligent solutions for Road Safety Through Technology and Begineering).
இது மகாராஷ்டிராவின் நாக்பூர் எனுமிடத்தில் சோதனை முறையில் தொடங்கப் பட்டு உள்ளது.
இது மத்திய அரசு, இன்டெல், INAI, IIIT – ஹைதராபாத், CSIR – CRRI (மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம்), மஹேந்திராமற்றும் நாக்பூர் மாநகராட்சிக் கழகம் ஆகியவற்றினால் இணைந்து தொடங்கப் பட்டுள்ளது.