TNPSC Thervupettagam

IRCC சான்றிதழ்கள் - இந்தியா

April 3 , 2026 14 hrs 0 min 19 0
  • நகோயா நெறிமுறையின் கீழ் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இணக்கச் சான்றிதழ்களை (IRCCs) வழங்குவதில் இந்தியா உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
  • இந்தியா 3,561 IRCCகளை வழங்கியுள்ளது என்ற நிலையில் இது உலகளவில் வழங்கப் பட்ட மொத்த சான்றிதழ்களில் 56 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
  • இந்த IRCC சான்றிதழ்கள், மரபணு வளங்களைப் பயன்படுத்துவதற்கான முன்னறிவிப்பு மற்றும் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளை உறுதிப் படுத்துகின்றன.
  • நகோயா நெறிமுறையானது உயிரியல் வளங்களிலிருந்து கிடைக்கும் நன்மைகளை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் பகிர்ந்துகொள்வதை உறுதி செய்கிறது.
  • இந்தியாவின் இந்தச் சாதனைக்கு 2002 ஆம் ஆண்டின் உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டம் மற்றும் அதன் வலுவான செயல்பாட்டு முறை ஆகியவை முக்கியக் காரணமாகும்.
  • தேசியப் பல்லுயிர் ஆணையம், மாநிலப் பல்லுயிர் வாரியங்கள் மற்றும் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் இணக்க நடவடிக்கைகளில் உதவுகின்றன.
  • இந்த நெறிமுறையில் உள்ள 142 நாடுகளில் 34 நாடுகள் மட்டுமே IRCC-களை வழங்கி உள்ளன அதில் இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்