IRT (Indian Road Traansport) மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தமிழக அரசுக்கு மாற்றம்
December 20 , 2018 2415 days 781 0
2019-2020 கல்வியாண்டில் இருந்து ஈரோட்டின் பெருந்துறையில் உள்ள இந்திய சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரியின் நிர்வாகம் மற்றும் மேலாண்மையை தமிழ்நாடு அரசு ஏற்கவுள்ளது.
இந்த நடவடிக்கையானது குறைந்த நிதிகளுடன் போக்குவரத்து கழகத்தால் அதனை நிர்வகிக்க இயலாமல் போனதன் காரணமாக எடுக்கப்பட்டுள்ளது.
இதனுடன் மாநில சுகாதாரத் துறையானது அதன் கீழ் ஏற்கனவே உள்ள 22 மருத்துவக் கல்லூரிகளுடன் சேர்த்து புதிதாக ஒரு கல்லூரியையும் சேர்க்க உள்ளது.