ISA 2025 கூட்டணியில் உலகளாவிய சூரிய சக்தி முன்னெடுப்புகள்
November 9 , 2025 3 days 35 0
சூரிய மின்சக்தி கழிவுகளை மறுசுழற்சி செய்து பசுமைத் தொழில் துறை சார் வாய்ப்புகளாக மாற்ற இந்தியா SUNRISE முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
SUNRISE என்பது மறுசுழற்சி, புதுமை மற்றும் பங்குதாரர் ஈடுபாட்டிற்கான சூரிய சக்தி மேம்பாட்டு வலையமைப்பு என்பதைக் குறிக்கிறது.
ஆசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் பன்னாட்டு சூரிய மின்சக்தி இணைப்புகளை ஊக்குவிப்பதற்காக இந்தியா OSOWOG என்ற (One Sun One World One Grid) முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில் சூரிய மின்சக்தி ஆராய்ச்சி, புதுமை மற்றும் பயிற்சிக்கான மையமாக உலகளாவிய திறன் மையம் (GCC) தொடங்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் தளமான ISA அகாடமி, உலகளவில் சூரிய சக்தி தொழில்நுட்பத்தில் தனிப்பயனாக்கப்பட்ட கற்றலை வழங்கும்.
தீவு நாடுகளுக்கான சூரிய மின்சக்தி கொள்முதல் மற்றும் நிதியுதவியை ஒழுங்குபடுத்துவதற்காக இந்தியாவும் உலக வங்கியும் SIDS (வளர்ந்து வரும் சிறிய தீவு நாடுகள்) கொள்முதல் தளத்தை உருவாக்கின.
சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியில் தற்போது 125 உறுப்பினர் நாடுகள் மற்றும் கையொப்பமிட்ட நாடுகள் சூரிய மின்மயமாக்கல், சிறிய மின் கட்டமைப்புகள் மற்றும் கிராமப்புற மின்மயமாக்கலில் ஈடுபட்டுள்ளன.